/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குருவிமலை சாலையோரம் சேதமடைந்த நடைபாதை
/
குருவிமலை சாலையோரம் சேதமடைந்த நடைபாதை
ADDED : செப் 28, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, குருவிமலை கிராமத்தில் சாலையோரம் சிமென்ட் கல் பாதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் சென்ற கனரக வாகனங்களால், சிமென்ட் கற்கள் உடைந்து நடைபாதை பகுதி சேதடைந்த நிலையில் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கிழும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், குருவிமலையில் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.