
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - -வேலுார் சாலை, சிறுகாவேரிபாக்கம், ஜெ.ஜெ., நகர் பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.
இங்கு ஜெ.ஜெ., நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதியினர் பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
பராமரிப்பு இல்லாததால், நிழற்குடைக்குள் குப்பை குவியலாக உள்ளது. மேலும், பயணியர் நிழற்குடை கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையிலும், சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது.
எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.