/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் விபத்து, தலைகாய சிகிச்சை பிரிவு துவக்க முடிவு
/
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் விபத்து, தலைகாய சிகிச்சை பிரிவு துவக்க முடிவு
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் விபத்து, தலைகாய சிகிச்சை பிரிவு துவக்க முடிவு
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் விபத்து, தலைகாய சிகிச்சை பிரிவு துவக்க முடிவு
ADDED : செப் 14, 2025 11:03 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் 1.92 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து மற்றும் தலைகாய சிகிச்சை பிரிவு துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உத்திரமேரூரில், வட்டார அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார த்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் தினமும் 600 பேர் புறநோயாளிகளாகவும், 100 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உத்திரமேரூரை சுற்றிலும் சாலை, தீக்காயம் மற்றும் பல்வேறு விபத்துகளில் சிக்குவோர், சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க வசதிகள் இல்லாததால், அவர்கள் செங்கல்பட்டு, சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு நீண்ட துாரம் செல்லும்போது காலதாமதம் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தலைகாய சிகிச்சை பிரிவு அமைக்க நோயாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 1.92 கோடி ரூபாய் மதிப்பில், 25 படுக்கைகள் கொண்ட கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பொதுப்பணித் துறையினரால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, சுகாதாரத் துறையினரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சோமசுந்தர் கூறியதாவது:
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தலைகாய சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான, திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து சுகாதார துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவாக கட்டுமான பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.