/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் அறிவிப்புக்கு முன் கட்டடங்கள் திறக்க முடிவு
/
தேர்தல் அறிவிப்புக்கு முன் கட்டடங்கள் திறக்க முடிவு
தேர்தல் அறிவிப்புக்கு முன் கட்டடங்கள் திறக்க முடிவு
தேர்தல் அறிவிப்புக்கு முன் கட்டடங்கள் திறக்க முடிவு
ADDED : பிப் 24, 2024 12:34 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி தாமல்வார் தெருவில், சிதிலமடைந்த நிலையில் இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடை கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க, 15.50 லட்சம் ரூபாயும், புதிய ரேஷன் கடை அமைக்க 18.50 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன், புதிய கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது என, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் தரப்பினர் தெரிவித்தனர்.