/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்பாண்ட சூளை புகையால் அவதி தொழிற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
/
மண்பாண்ட சூளை புகையால் அவதி தொழிற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
மண்பாண்ட சூளை புகையால் அவதி தொழிற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
மண்பாண்ட சூளை புகையால் அவதி தொழிற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 01:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு பாலாஜி நகர், உடையார் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் உள்ளனர்.
இவர்கள் மண் அடுப்பு, பூந்தொட்டி, மண்பானை, போகி மேளத்திற்கான மண்தள ஓடு, அகல் விளக்கு உள்ளிட்ட மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர்.
மழைக்காலங்களில், மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த மண்பாண்டங்களை சேமித்து வைத்து சூளைபோடுவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குடியிருப்பை ஒட்டியுள்ள பொது இடத்தில், திறந்தவெளியில் மண்பாண்ட பொருட்களை தீயிட்டு எரித்து, சூளை போடுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பர்களுக்கு, கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், குழந்தைகள், முதியோர், மூச்சத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து, இப்புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
எனவே, கைத்தொழில் வாரியத்தின் வாயிலாக திருக்காலிமேடில் மண்பாண்ட தொழிலுக்கான தொழிற்கூடமும், உற்பத்தி செய்ய மண்பாண்டங்களை சேமித்து வைக்க தொழிற்கூடம் கட்டித்தர வேண்டும் என, திருக்காலிமேட்டை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.