/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
/
மேற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
மேற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
மேற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
ADDED : ஏப் 15, 2025 12:57 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தரசரஸ் குளத்தில், அத்தி வரதர் சயன நிலையில் உள்ளார். இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவிலின் மேற்கு மாட வீதியில், கோவில் மதில் சுவரையொட்டிய பகுதி ஆக்ரமிக்கப்பட்டு, சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், எதிர்புறத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துவிட்டதால், வடக்கு மாட வீதியான, செங்கல்பட்டு சாலையில் இருந்து கோவிலுக்கு நடந்து வரும் பக்தர்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மேற்கு மாடவீதியில், உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், ஆட்டோக்களை நிறுத்த தடை விதிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.