/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் வாக்குறுதியில் நெசவாளர்கள் நிவாரணம் அறிவிப்பு கூட வெளியாகாததால் ஏமாற்றம்
/
தேர்தல் வாக்குறுதியில் நெசவாளர்கள் நிவாரணம் அறிவிப்பு கூட வெளியாகாததால் ஏமாற்றம்
தேர்தல் வாக்குறுதியில் நெசவாளர்கள் நிவாரணம் அறிவிப்பு கூட வெளியாகாததால் ஏமாற்றம்
தேர்தல் வாக்குறுதியில் நெசவாளர்கள் நிவாரணம் அறிவிப்பு கூட வெளியாகாததால் ஏமாற்றம்
ADDED : அக் 21, 2024 01:26 AM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதிக தொழிலாளர்கள் ஈடுபடும் நெசவுத்தொழில், மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது.
கைத்தறியின் அனைத்து உபகரணங்களுமே, மரத்தால் செய்யப்பட்டுஉள்ளதால், ஈரப்பதம் காரணமாக, நெசவுத்தொழிலுக்கு அவை ஒத்துழைப்பதில்லை.
காஞ்சிபுரம் மாவட்டம்முழுதும், பட்டு மற்றும்பருத்தி கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் 4,161 பேரும், தனியாரிடம் 4,500 நெசவாளர்கள் என, 8,661 குடும்பங்கள் நெசவுத்தொழிலை நம்பி உள்ளனர்.
இவர்களுக்கு, மழை காரணமாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில், பணிகள் முடங்கி வருவாய் குறைந்து விடுகிறது.
ஏற்கனவே கூலி குறைவாக பெறும் நெசவாளர்களுக்கு, பணி முடக்கம் காரணமாக மேலும் வருவாய் பாதிக்கிறது.
தி.மு.க., அரசு, 2021ல் ஆட்சி அமைக்கும் போது, மாவட்ட வாரியாக அளித்த தேர்தல் வாக்குறுதியில், 'மழைக்காலத்தில் தொழில் செய்ய முடியாமல் சிரமப்படும் நெசவாளர்களுக்காக, நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, 45 தேர்தல் வாக்குறுதியில், இந்த வாக்குறுதி 41வது இடத்தில் உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்காவது பருவமழை பெய்து வருகிறது.
ஆனால், இம்முறையும் நிவாரண உதவித்தொகை வழங்கபடவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு கூட வராதது நெசவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

