ADDED : பிப் 04, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஒன்றியம்கடம்பர்கோவில் கிராமத்தில், ஆவுடைநாயகிசமேத கடம்பநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு காஞ்சிபுரம், சென்னை, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவில் முன் அப்பகுதிவாசிகள் மாடுகளை கட்டி வருகின்றனர். அதனால் கோவிலுக்குவரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. கோவில் நிர்வாகத்தினர் மாடுகள் கட்டுவதை தடுக்க, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
எனவே, கோவில் முன் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, மாடுகள் கட்டுவதை தடுக்க, கோவில் நிர்வாகத்தினர்நடவடிக்கை எடுக்கபக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.