/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகள் சூழ்ந்த வடிகால்வாய் மழைநீர் தேங்கும் அபாயம்
/
செடிகள் சூழ்ந்த வடிகால்வாய் மழைநீர் தேங்கும் அபாயம்
செடிகள் சூழ்ந்த வடிகால்வாய் மழைநீர் தேங்கும் அபாயம்
செடிகள் சூழ்ந்த வடிகால்வாய் மழைநீர் தேங்கும் அபாயம்
ADDED : ஜன 13, 2025 12:55 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சின்னய்யங்குளம் காலனிக்கு செல்லும் பிரதான சாலையை ஒட்டியுள்ள தாண்டராயன் நகர், திருவேகம்பன் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி அருகில், கால்வாயில் செடி, கொடிகள் மண்டியுள்ளதோடு, மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, சின்னய்யங்குளம் சாலையோரம் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.