/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் துார்வார வலியுறுத்தல்
/
வடிகால்வாய் துார்வார வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 11:31 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, பிள்ளையார்பாளையம், தாத்திமேடு பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், குழந்தைள் காப்பகம் ஒட்டி அமைந்துள்ள மழைநீர் வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பிள்ளையார்பாளையம், தாத்திமேடு பகுதியில், மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.