/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் கட்டடக் கழிவுகளால் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
கால்வாயில் கட்டடக் கழிவுகளால் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் கட்டடக் கழிவுகளால் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் கட்டடக் கழிவுகளால் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : பிப் 19, 2024 06:11 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, வையாவூரில் இருந்து, சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. ஒழையூர் மோட்டூர் அருகே, சாலை ஓர வீட்டுமனைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த வீட்டுமனைப் பிரிவிற்கு செல்வதற்கு ஏற்ப, ஏரி நீர்வரத்து கால்வாயில், சிமென்ட் பைப் போட்டு, தனியார் வீட்டுமனைப் பிரிவினர் கட்டடக் கழிவு கொட்டி உள்ளனர்.
இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய நீர் வள ஆதாரத் துறையினர் கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக அப்பகுதி விவசாயிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஒழையூர் மோட்டூர் அருகே, ஏரிநீர் வரத்துக் கால்வாய் குறுக்கே கொட்டியுள்ள கட்டடக் கழிவுகளை அகற்றி கால்வாயை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.