/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஜன 18, 2024 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நிலை குறித்து, வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான மதுமதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் ரம்யா, சரவணக்கண்ணன், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மதுமதி கேட்டறிந்தார்.
மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ள 22ம் தேதி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

