/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாவூரான் கால்வாய் ஆக்கிரமிப்பு பருவ மழைக்கு நீர்வடிவதில் சிக்கல்

ADDED : அக் 18, 2024 01:47 AM

காஞ்சிபுரம்:தென்னேரி ஏரி கலங்கலில் வெளியேறும் தண்ணீர், தேவரியம்பாக்கம் கிராமம் வழியாக செல்லும் உள்ளாவூரான் கால்வாய் வாயிலாக, உள்ளாவூர் ஏரியை சென்றடைகிறது.
இந்த கால்வாயையொட்டி சுற்றுகால் என, அழைக்கப்படும் மற்றொரு போக்கு கால்வாய் உள்ளது. இந்த இருகால்வாய்களும், ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்களை வைத்திருக்கும் கிடங்காக பயன்படுத்தி வரும் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்து, கட்டுமான பணிகள் செய்து வருகின்றன.
இதுகுறித்து, தேவரியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் தரப்பு மற்றும் கிராம மக்களுடன் முதல்வர் முகாமில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டரிடம் விவசாயிகள் நேரடியாக மனு அளித்தனர்.
நேற்று முன் தினம் வரையில், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கு பருவ மழைக்கு, தென்னேரி ஏரி கலங்கலில் தண்ணீர் வெளியேறி உள்ளாவூரான் கால்வாய் வழியாக செல்வதற்கு வழியின்றி வயலில் புகும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத் துறையினர் ஆய்வு செய்து, கால்வாய் ஆக்கிரமிப்பு முழுதுமாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.