/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்புலிவனம் - சாலவாக்கத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
திருப்புலிவனம் - சாலவாக்கத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
திருப்புலிவனம் - சாலவாக்கத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
திருப்புலிவனம் - சாலவாக்கத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 05, 2025 10:21 PM
உத்திரமேரூர்:திருப்புலிவனத்தில் இருந்து சாலவாக்கத்திற்கு மாலை நேர பேருந்து வசதி ஏற்படுத்த அரசு கல்லுாரி மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் டாக்டர். எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 2,000 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
கல்லுாரியில் 2025 --- 26ம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவ - மாணவியர் சேர்க்கை நடந்து முடிந்தது. இதையடுத்து, முதலாமாண்டு வகுப்புகள் கடந்த ஜூன் 30ல் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து, திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு, தடம் எண் 68 பேருந்து, தினமும் காலை மற்றும் மதியம் என, இருமுறை வந்து செல்கிறது.
இந்த பேருந்தை சாலவாக்கம், மருதம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, காலை நேர கல்லுாரியில் படிக்கும் மாணவ - மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாலவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இக்கல்லுாரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளனர்.
அதில், மாலை நேர கல்லுாரியில் 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்கள் மாலை நேர கல்லுாரி முடிந்து, மாலை 5:30 மணிக்கு மீண்டும் சாலவாக்கத்திற்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், பெற்றோருடன் தினமும் இருசக்கர வாகனத்தில், சாலவாக்கம் காப்புகாடு வழியாக வீட்டிற்கு செல்கின்றனர்.
இதற்காக, மாலை நேர வகுப்பில் சேர்ந்த மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து, காலை நேர வகுப்பிற்கு மாற்றி தருமாறு கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டு வருகின்றனர்.
எனவே, திருப்புலிவனத்தில் இருந்து, சாலவாக்கத்திற்கு தினமும் மாலையில் பேருந்து சேவையை தொடங்க, போக்குவரத்து துறையினருக்கு மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.