/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
/
சாலையோர வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
சாலையோர வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
சாலையோர வளைவில் பள்ளம் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 01, 2025 12:26 AM

ஆசூர்:காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலையில், களக்காட்டூரில் இருந்து விச்சந்தாங்கல், காலுார், பெரியநத்தம் வழியாக ஆசூர், அவளூர், வாலாஜாபாத் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், ஆசூர் ஊராட்சி, கொளத்துார் கிராமத்தில் அபாயகரமான வளைவு உள்ளது.
இந்த சாலையோர வளைவு பகுதியில், மழைநீர் செல்லும் கால்வாய் மற்றும் சிறுபாலம் உள்ளது. இப்பகுதியில், தடுப்புச்சுவர் இல்லாததால், காலுாரில் இருந்து வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது, மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஆசூர் ஊராட்சி, கொளத்துார் கிராமத்தில் சாலையோரம் மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைந்துள்ள பகுதியில், தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.