/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 28, 2025 08:24 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்தில் வைப்பூர் ஊராட்சி உள்ளது. வைப்பூர், காரணித்தாங்கல், கூழாங்கல்சேரி, வெள்ளேரித்தாங்கல், வஞ்சுவாஞ்சேரி கிராமங்கள் வைப்பூர் ஊராட்சியில் உள்ளது.
இதில், வைப்பூர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 5 வயதிற்குட்பட்ட 30 க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.
இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. போதிய மாணவர்கள் இல்லாததால் அங்கன்வாடி மூடப்பட்டது.
தற்போது வைப்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லை. இதனால், இங்குள்ள குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆரம்ப கல்வி பெறுவதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் இணை உணவு பெற சிரமப்படுகின்றனர்.
எனவே, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, வைப்பூர் பகுதியில் நவீன வசதிகளுடன் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.