/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெசவாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
/
நெசவாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
ADDED : நவ 25, 2025 04:06 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., நெசவாளர் மற்றும் மருத்துவ பிரிவு சார்பில், அய்யன்பேட்டையில் நேற்று நடந்த நெசவாளர்களுக்கான கண் மருத்துவ பரிசோதனை முகாமில், 256 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அய்யன்பேட்டையில் நடந்த இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமிற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
மாநில நெசவாளர் பிரிவு துணை தலைவர் வஜ்ரவேல், மாநில பொது குழு உறுப்பினர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நெசவாளர்கள், பொதுமக்கள் என, முகாமில் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், கண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 256 நெசவாளர்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப் பட்டது.
இன்று கருக்குப்பேட்டையில் உள்ள சங்கர் மஹால் திருமண மண்டபத்திலும், நாளை, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள சக்திவேல் திருமண மண்டபத்திலும், நெசவாளர்களுக்கு கண் மருத்துவ முகாம் நடக்கிறது.
கண் பரிசோதனை செய்து நெசவாளர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

