ADDED : அக் 31, 2026 08:08 PM
ஒரகடம்: விடுப்பு மற்றும் போனஸ் கேட்டு, தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லம்- வடகால் சிப்காட் பகுதியில், ‘ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நான்கு நாட்கள் விடுப்பு மற்றும் போனஸ் வழங்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, தொழிற்சாலை நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று மாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணி முடிந்து வெளியே செல்ல முயன்ற உள்ளூர் தொழிலாளர்களை, வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த ஒரகடம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
