/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் வட்டம்பாக்கம் விவசாயிகள் அச்சம்
/
தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் வட்டம்பாக்கம் விவசாயிகள் அச்சம்
தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் வட்டம்பாக்கம் விவசாயிகள் அச்சம்
தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் வட்டம்பாக்கம் விவசாயிகள் அச்சம்
ADDED : செப் 26, 2024 11:24 PM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் கிராமத்தில், விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் மத்தியில் மின் கம்பங்களில் வாயிலாக செல்லும் மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன.
டிராக்டர் வாயிலாக உழவுப் பணி மேற்கொள்ளும் போது, தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால், விவசாய பணி மேற்கொள்ள தடை ஏற்படுகிறது.
மேலும், அறுவடை காலத்தில், இயந்திரங்கள் வாழிலாக அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போது, தனியாக ஆட்களை வைத்து மரக்கிளைகள் வாயிலாக மின் கம்பிகளை உயர்த்தி பிடிக்க வேண்டியுள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
அதேபோல, தாழ்வாக செல்லும் மின் ஒயர், காற்று வேகமாக வீசும் போது ஒன்றோடு ஒன்று உரசும் போது அறுந்து விழுந்து, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், மின் ஒயரில் சிக்கி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், விளைநிலங்ளின் மத்தியில் செல்லும் மின் ஒயரை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.