/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்டலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
/
மண்டலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
ADDED : பிப் 17, 2025 01:18 AM

பூசிவாக்கம்:சென்னை, மண்ணடி மல்லிகேஸ்வரரர் உழவாரப்பணி மன்றத்தினர், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து பாழடைந்துள்ள உள்ள கோவில்களில் உழவாரப்பணியாக சீரமைப்பு பணி செய்கின்றனர்.
திறந்து வெளியில் உள்ள கோவில்களுக்கு கூரை அமைத்தல், திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட திருப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி பாவாசாகி பேட்டையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்டலேஸ்வரர் கோவில் பராமரிப்பின்றி உள்ளது. இக்கோவிலில் நேற்று மல்லிகேஸ்வரரர் உழவாரப்பணி மன்றத்தினர், உழவாரப்பணி மேற்கொண்டனர்.
இதில், கோவில் கோபுரம், மதில்சுவர், பிரகாரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை வேருடன் அகற்றினர். உட்பிரகாரத்தில் துாய்மைப்படுத்தினர்.

