ADDED : அக் 19, 2024 11:33 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு ஊராட்சியில், வதியூர் துணை கிராமம் உள்ளது. இங்கு, அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம் அருகே, இரண்டு மின் மாற்றிகள் உள்ளன. ஒரு மின்மாற்றி வாயிலாக, குடியிருப்புகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. மற்றொரு மின் மாற்றியின் வாயிலாக விவசாய நிலங்களுக்கு மின் சப்ளையாகிறது.
ஒரு வாரமாக, குடியிருப்புகளுக்கு செல்லும் மின் மாற்றி பழுடைந்துள்ளது. இதனால், விவசாயத்திற்கு செல்லும் மின் மாற்றியில் மின் சப்ளை மாற்றி இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், குடியிருப்புகளுக்கு, குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு தண்ணீரை பாய்ச்சவும் முடியவில்லை என, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
எனவே, பழுதடைந்த மின் மாற்றி சீரமைத்து, குறைந்தழுத்த மின் வினியோகத்தை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.