ADDED : ஜூலை 14, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட் பகுதியில், அரக்கோணம் செல்லும் சாலையில், ஸ்ரீசாய் என்டர்பிரைசஸ் என்ற மர பொருட்கள் வியாபாரம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில், இந்த நிறுவனத்தில் உள்ள மரக்கழிவு பொருட்கள் திடீரென தீ பற்றி எரிந்தன.
தீ மளமளவென அதிகரித்ததால், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள், சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.