/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடுத்தடுத்து 2 கடைகளில் தீ ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
/
அடுத்தடுத்து 2 கடைகளில் தீ ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
அடுத்தடுத்து 2 கடைகளில் தீ ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
அடுத்தடுத்து 2 கடைகளில் தீ ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : பிப் 12, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம், 47. ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவளூர்குப்பம் பகுதியில் பெனாயில், லைசால், ஆசிட் உள்ளிட்ட கழிப்பறை உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
அதேபோல், இவரது கடை அருகே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை செல்வம் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, தீப்பற்றி எரிய துவங்கியது. இதையடுத்து, தீ அருகே உள்ள மளிகை கடைக்கு பரவியது.
தகவல் அறிந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், கடையின் ஷட்டரை உடைத்து தீயை அனைத்தனர்.
அதற்குள், இரண்டு கடைகளும் எரிந்த நாமாகின. இதில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.