/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1.52 லட்சம் மீன் குஞ்சுகளை 3 ஏரியில் விட்ட மீன் வளர்ச்சி துறை
/
1.52 லட்சம் மீன் குஞ்சுகளை 3 ஏரியில் விட்ட மீன் வளர்ச்சி துறை
1.52 லட்சம் மீன் குஞ்சுகளை 3 ஏரியில் விட்ட மீன் வளர்ச்சி துறை
1.52 லட்சம் மீன் குஞ்சுகளை 3 ஏரியில் விட்ட மீன் வளர்ச்சி துறை
ADDED : அக் 29, 2025 11:37 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், மூன்று ஏரிகளில் 1.52 லட்சம் மீன் குஞ்சுகளை, மீன் வளர்ச்சி துறையினர் நேற்று விட்டனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் மீன் வளர்ப்பை அதிகப்படுத்த, மீன் வளர்ச்சி துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 10 மாதத்திற்கு தண்ணீர் வற்றாத ஏரிகளை கண்டறிந்து, அதில் மீன் குஞ்சுகளை விட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான மீன் குஞ்சுகளை விட, உத்திரமேரூரில் மூன்று ஏரிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ஆலப்பாக்கம், ரெட்டமங்கலம், பினாயூர் ஆகிய மூன்று ஏரிகளில், 1.52 லட்சம் மீன் குஞ்சுகள் விட மீன் வளர்ச்சி துறையினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில், மீன் வளர்ச்சி துறை சார்பில், ஏரியில் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி, ஆலப்பாக்கம் ஏரியில் நேற்று நடந்தது. மீன் வளத்துறை உதவி இயக்குநர் சசிகலா தலைமை தாங்கினார்.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டார். மொத்தமாக, ஆலப்பாக்கம், ரெட்டமங்கலம், பினாயூர் ஆகிய மூன்று ஏரிகளில் 1.52 லட்சம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டன.
இதில், உத்திரமேரூர் ஒன்றிய துணை சேர்மன் வசந்தி, மாவட்ட கவுன்சிலர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

