/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அனுமதியின்றி சாலை சீரமைப்பு வனத்துறையினர் தடுத்து நிறுத்தம்
/
அனுமதியின்றி சாலை சீரமைப்பு வனத்துறையினர் தடுத்து நிறுத்தம்
அனுமதியின்றி சாலை சீரமைப்பு வனத்துறையினர் தடுத்து நிறுத்தம்
அனுமதியின்றி சாலை சீரமைப்பு வனத்துறையினர் தடுத்து நிறுத்தம்
ADDED : ஜன 30, 2025 11:50 PM

சித்தாமூர், சித்தாமூர் அடுத்த பூரியம்பாக்கம் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் இருந்து வேட்டூர் செல்லும் சாலை, 6 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இங்குள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையம் எதிரே வனப்பகுதிக்கு அருகே உள்ள, 500 மீட்டர் நீள சாலை சேதமடைந்து இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டது. வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க அனுமதி வேண்டி வனத்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று அனுமதி பெறாமல் சாலை சீரமைப்பு பணி நடந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சீரமைப்புப் பணியை பாதியில் நிறுத்தி, அனுமதி வழங்கிய பின் சாலை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதை அடுத்து பணி பாதியில் நிறுத்தப்பட்டது.