/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் ரயில் நிலையத்தில் குப்பை அகற்றி தன்னார்வலர்கள்
/
பழையசீவரம் ரயில் நிலையத்தில் குப்பை அகற்றி தன்னார்வலர்கள்
பழையசீவரம் ரயில் நிலையத்தில் குப்பை அகற்றி தன்னார்வலர்கள்
பழையசீவரம் ரயில் நிலையத்தில் குப்பை அகற்றி தன்னார்வலர்கள்
ADDED : அக் 30, 2024 09:05 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் ரயில் நிலையம் உள்ளது. திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை வரையிலான பல பகுதிகளுக்கு இந்த ரயில் நிலையம் வழியாக ரயில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ரயில் நிலையம் நடைபாதையில், பயணியர் மற்றும் பழையசீவரம் பகுதியினரால், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு குப்பை கழிவுகள் போடப்பட்டு தேக்கமாகி காணப்படுகின்றன.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற விதைகள் தன்னார்வலர் அமைப்பினர் தீர்மானித்தனர்.
அதன்படி, விதைகள் தன்னார்வலர் மற்றும் திருவேணி அகாடமி பள்ளி மாணவ - மாணவியர் இணைந்து நேற்று, பழையசீவரம் ரயில் நிலையம் மற்றும் நடை பாதைகளில் தேங்கி இருந்த குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குப்பையை கண்ட இடத்தில் வீசாமல் ரயில் நிலையத்தை பராமரிக்க, அங்கிருந்த பயணியர் இடத்தில் அறிவுறுத்தினர்.