/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோமாரி தடுப்பூசி முகாம் ஜன., 3ம் தேதிக்கு மாற்றம்
/
கோமாரி தடுப்பூசி முகாம் ஜன., 3ம் தேதிக்கு மாற்றம்
ADDED : டிச 18, 2024 08:09 PM
காஞ்சிபுரம்:கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடை இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,69,200 பசு, எருமை, கன்று ஆகிய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, டிச., 16 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிச., 16க்கு பதிலாக, ஜன., 3ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

