/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
7 சுகாதார மையங்கள் திறக்க அரசு ஒப்புதல்
/
7 சுகாதார மையங்கள் திறக்க அரசு ஒப்புதல்
ADDED : ஜூன் 28, 2025 10:08 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஆறு நகர்நல மையங்கள் என, ஏழு சுகாதார மையங்கள் திறக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம் முழுதும், 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 22 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 208 நகர் நல மையங்கள் என, 258 சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இந்த சுகாதார மையங்களை ஜூலை- 3ம் தேதி, முதல்வர், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைக்க உள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
மாங்காடு நகராட்சி ஒன்று மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஐந்து நகர் நல மையங்கள் என, ஏழு மையங்கள் திறக்க சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதை, முதல்வர் திறந்த பின், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று திறக்க உள்ளனர் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.