/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருநங்கையருக்கு அரசின் முன்மாதிரி விருது வாய்ப்பு
/
திருநங்கையருக்கு அரசின் முன்மாதிரி விருது வாய்ப்பு
திருநங்கையருக்கு அரசின் முன்மாதிரி விருது வாய்ப்பு
திருநங்கையருக்கு அரசின் முன்மாதிரி விருது வாய்ப்பு
ADDED : ஜன 27, 2025 11:45 PM
சென்னை, தமிழக அரசால், ஆண்டுதோறும், திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய திருநங்கையருக்கு, முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2024 - -25ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, அரசு உதவித்தொகை பெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது.
காவல் நிலையத்தில் குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் சேவை தொடர்பான விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளோர், awards.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில், பிப்., 10க்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.