/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடவோலை கல்வெட்டை பார்வையிட்ட கவர்னர்
/
குடவோலை கல்வெட்டை பார்வையிட்ட கவர்னர்
ADDED : ஜன 01, 2025 12:35 AM

உத்திரமேரூர்,உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, குடவோலை முறை கோவில் எனப்படும் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 1,000 ஆண்டுகளுக்கு முன், தேர்தல் முறைகள் குறித்த கல்வெட்டுகள் உள்ளது.
நேற்று காலை 11:00  மணிக்கு கவர்னர், குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப் பட்டது. பின், கோவிலில்உள்ள வைகுண்ட பெருமாளை வழிபாடு செய்தார்.
தொடர்ந்து, தேர்தல் முறைகள் குறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டார். அப்போது, வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு குறித்து, கவர்னரிடம் விளக்கினர். மதியம் 12:00 மணிக்கு கல்வெட்டு கோவிலில் இருந்து, சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
உத்திரமேரூர் கல்வெட்டு கோவிலுக்கு, கவர்னர் வருகை புரிந்ததால், 200-க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர்.

