/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சங்கரா கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 07, 2025 02:20 AM

ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராமவெங்கடேசன் தலைமையில் நடந்தது.
செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்புல தலைவர் முனைவர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களையும், துறைவாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற, 42 மாணவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கி பேசினார்.
விழாவிற்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நவீன் குமார் முன்னிலை வகித்தார். தமிழ், கணிதம், இயற்பியல், உயிர்ம வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் நிர்வாக மேலாண்மை ஆகியவற்றின் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஏழு துறையைச் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்றனர். இரண்டாம் பிரிவு மாணவர்கள் 1,300 பேருக்கு பட்டமளிப்பு விழா இம்மாதம் இறுதியில் நடைபெறும் என, கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தெரிவித்தார்.

