ADDED : ஜன 22, 2025 07:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு, செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளன.
தற்போது, 18 வது சுற்றுக்கு காவாந்தண்டலம், மாகரல், சிறுவாக்கம், காரை, வேடல், சோகண்டி,மெளச்சூர்,நாட்டரசன்பட்டு, ராவத்தநல்லுார், செரப்பணஞ்சேரி, மேல்பாக்கம், ஆணம்பாக்கம் ஆகிய கிராமங்களில், நாளை சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.