/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராம சேவை மைய கட்டடம் தைப்பாக்கம் கிராமத்தில் சேதம்
/
கிராம சேவை மைய கட்டடம் தைப்பாக்கம் கிராமத்தில் சேதம்
கிராம சேவை மைய கட்டடம் தைப்பாக்கம் கிராமத்தில் சேதம்
கிராம சேவை மைய கட்டடம் தைப்பாக்கம் கிராமத்தில் சேதம்
ADDED : டிச 11, 2024 11:08 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தாமல் ஊராட்சிக்கு தைப்பாக்கம் கிராமத்தில், கிராம சேவை மைய கட்டடம் உள்ளது.
இக்கட்டடம், 2014-15ம் நிதி ஆண்டில், கட்டப்பட்டது. இக்கட்டடத்திற்கு போதிய பாதுகாப்பு அமைக்கவில்லை. இதனால், கட்டடத்தில் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களை அரங்கேற்றும் கூடாரமாக மாறி உள்ளது.
மேலும், கட்டடத்தின் முகப்பு சிலாப் பகுதியில் சேதம் ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.
இதனால், மழைக்காலத்தில் கட்டடத்தில், மக்கள் ஒதுங்க கூட முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டடத்தில் சேதத்தை சரி செய்ய வேண்டும். மேலும், கட்டடத்திற்கு முன் கம்பி தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.