/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் பாலாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

ADDED : ஆக 25, 2025 12:51 AM

உத்திரமேரூர்:திருமுக்கூடல் பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் வகையில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன.
உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் கிராமத்தில் பாலாறு செல்கிறது. இந்த பாலாறு சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.
மேலும், பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலமாக, பல்வேறு கிராமங்களுக்கு தேவையான குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், திருமுக்கூடல் பாலாற்றில், 10 ஆண்டுக்கு முன் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டது. அப்போது, பாலாற்றில் மணல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக ஆழத்தில் அள்ளப்பட்டது.
தற்போது, மணல் குவாரி செயல்பட்ட இடங்களில், கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இந்த கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, சுற்றுவட்டார கிராமங்களின் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், மழை நேரங்களில் பாலாற்றில் தண்ணீர் வரும்போது, அவை தடையின்றி செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, திருமுக்கூடல் பாலாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.