/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சித்தாத்துாரில் கைப்பந்து போட்டி
/
சித்தாத்துாரில் கைப்பந்து போட்டி
ADDED : நவ 25, 2025 04:07 AM

வாலாஜாபாத்: சித்தாத்துாரில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது.
வாலாஜாபாத் வட்டாரம், இளையனார்வேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாத்துார் (சி.டி.ஆர். பிரண்ட்ஸ்) அணி சார்பில், இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
அதன்படி, கடந்த 22ம் தேதி, சித்தாத்துார் விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து போட்டி துவங்கியது. 25 புள்ளிகள் கொண்டு நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 24 அணிகள் மோதின.
போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு, இளையனார்வேலுார் ஊராட்சி தலைவர் கமலக்கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற அணிகளில், வேலுார் மாவட்டம், இ.என்.டபிள்யு.ஏ., அணி முதல் இடம் பிடித்தது. அந்த அணிக்கு 10,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 5,000 ரூபாய் மதிப்பிலான கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற உள்ளூரைச் சேர்ந்த சித்தாத்துார் (சி.டி.ஆர். பிரண்ட்ஸ்) அணிக்கு 7,000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த தர்மபுரி அணிக்கு 5,000 ரூபாய்; நான்காம் இடம் பிடித்த பனப்பாக்கம் அணிக்கு 3,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நான்கு அணிகளுக்கும் கோப்பை வழங்கி பாராட்டப்பட்டது.

