UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 09:14 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம சுகாதார செவிலியர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில செயலர் பவானி தலைமை தாங்கினார்.
கிராம சுகாதார செவிலியர்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மழையையும் பொருட்படுத்தாமல், 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
