/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் மணல் குவியல் பொன்னேரிக்கரையில் அபாயம்
/
சாலையோரம் மணல் குவியல் பொன்னேரிக்கரையில் அபாயம்
ADDED : ஜன 30, 2025 11:41 PM

கோனேரிக்குப்பம், காஞ்சிபுரம் ஒன்றியம்கோனேரிகுப்பம் ஊராட்சி, பொன்னேரிக்கரை வடக்கு பகுதியில், சென்னை -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தாமல், பாலுசெட்டிசத்திரம்,ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலுார், பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பொன்னேரிக்கரை போலீஸ் பூத் அருகில், சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக மண் குவியலாக உள்ளது. இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண் குவியலில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் உள்ள மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.