/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 07, 2025 02:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட எழிச்சூர் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள இந்திரா காந்தி தெரு, துர்க்கை அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மழைநீர் வடிகால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. மண் மற்றும் குப்பை கால்வாயில் தேங்கி வடிகால்வாய் முழுமையாக துார்ந்து உள்ளது.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், காலவாயில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.