/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்க தோட்டக்கலை அலுவலர்கள் தீர்மானம்
/
கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்க தோட்டக்கலை அலுவலர்கள் தீர்மானம்
கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்க தோட்டக்கலை அலுவலர்கள் தீர்மானம்
கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்க தோட்டக்கலை அலுவலர்கள் தீர்மானம்
ADDED : ஜூலை 24, 2025 01:30 AM
காஞ்சிபுரம்,:உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு, கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட செயலர் பிருதிவிராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில், 'வாலாஜாபாத் மற்றும் குன்றத்துார் வட்டாரங்களில், சேதமடைந்த கட்டடத்தை அகற்றி, கழிப்பறையுடன் கூடிய புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். பயணப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு கலந்தாய்வு மூலமாக மட்டுமே பணி மாறுதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.