/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் புதிய நிழற்கூரை கட்டடம் திறப்பு
/
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் புதிய நிழற்கூரை கட்டடம் திறப்பு
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் புதிய நிழற்கூரை கட்டடம் திறப்பு
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் புதிய நிழற்கூரை கட்டடம் திறப்பு
ADDED : நவ 15, 2024 07:54 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இப்பேருந்து நிலையத்தில் பயணியர் நலன் கருதி, கடந்த 2015- - 16ம் ஆண்டில், 60 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டது.
எனினும், உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி, போளூர், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரதான சாலை வழியாக செல்வதால், அங்குள்ள பேருந்து நிறுத்தத்திலும் நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து, உத்திரமேரூர் பேருந்து நிலையம் எதிரே பயணியர் நிழற்கூரை அமைக்க, உத்திரமேரூர் தி.முக., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணி கடந்த மார்ச் மாதம் துவங்கி-, சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது. புதிய நிழற்கூரை கட்டடத்திற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நிழற்கூடையை திறந்து வைத்தார். உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.