/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம்
/
அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம்
ADDED : மார் 04, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : அய்யா வைகுண்டரின் 192ம் ஆண்டு அவதார தின விழா, காஞ்சிபுரம் பள்ளத்துபதி சார்பில் நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நேற்று, காலை 6:00 மணிக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தேரடி அருகில் இருந்து, பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் புறப்பட்டது.
பல்வேறு முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம், சின்ன காஞ்சிபுரம், திருவீதிபள்ளம், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள பள்ளத்துபதியில் நிறைவு பெற்றது.

