sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

/

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 18, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க கல்வி பட்டய தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல், வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், களியாண் பூண்டியில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தமிழ்செல்வி வெளியிட்டசெய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மற்றும்செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் மே, ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல், வரும் 24ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர, அரசு வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதிதிட்டத்தின் கீழ் வரும் 25, 26ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்க கல்வி பட்டயதேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தைபதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை காஞ்சி புரம் மாவட்டம், களியாம்பூண்டி, மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாகமேற்குறிப்பிட்ட நாட் களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏற்கனவே தேர்வு எழுதி, பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் இணைத்து, தேர்வு கட்டணத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய். தனித்தனியே முதலாம் ஆண்டுமற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் பெற 100 ரூபாய், பதிவு மற்றும்சேவை கட்டணத்திற்கு 15 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய், சிறப்பு அனுமதி திட்டம் கூடுதலாக 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us