/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருதம் காப்புக்காட்டை ஒட்டி கம்பி வேலிகள் அமைக்க வலியுறுத்தல்
/
மருதம் காப்புக்காட்டை ஒட்டி கம்பி வேலிகள் அமைக்க வலியுறுத்தல்
மருதம் காப்புக்காட்டை ஒட்டி கம்பி வேலிகள் அமைக்க வலியுறுத்தல்
மருதம் காப்புக்காட்டை ஒட்டி கம்பி வேலிகள் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 17, 2025 01:25 AM
உத்திரமேரூர்:மருதம் காப்புக்காட்டை ஒட்டி, கம்பி வேலிகள் அமைக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா, மருதம் கிராமத்தில் காப்புக்காடு உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த காடு, 1,000 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த காப்பு காட்டில் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்த வன விலங்குகளுக்கு காட்டுப் பகுதியில் தேவையான தண்ணீர், உணவு கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்கு வருகின்றன.
அப்போது, நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகிய விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. மேலும், இந்த மருதம் காப்பு காட்டின் வழியாக, மலையாங்ககுளம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையின் இருபுறமும் காப்புக்காடு இருப்பதால், சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் காப்புக்காடு சாலை வழியே செல்லும்போது, காட்டுப்பன்றிகள் திடீரென்று குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, மருதம் காப்புக்காட்டை ஒட்டி கம்பி வேலிகள் அமைக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.