/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டங்களால் விபத்து அபாயம்

ADDED : மே 18, 2025 10:53 PM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலம் வழியாக, வண்டலுார் - - வாலாஜாபாத் வாகனங்களும், மேம்பாலத்தின் கீழ் செல்லும் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் ஒரகடம் சந்திப்பில், சிங்கபெருமாள் கோவில் மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் இடது புறம் திரும்பி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் செல்கிறது.
இந்த சாலையில், மேம்பாலத்தின் அருகாமையில் உள்ள கடைகளில் இருந்து வீணான இரும்பு சட்டங்கள் மற்றும் மர சாமான்களை, சாலையோரம் வைத்துள்ளனர்.
பிரதான சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், திடீரென சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, விபத்து ஏற்படும் முன், மேம்பாலத்தின் அருகே, சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.