/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதூர் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமையுமா?
/
மதூர் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமையுமா?
ADDED : பிப் 10, 2025 01:49 AM
உத்திரமேரூர்: திருமுக்கூல் சாலவாக்கம் நெடுஞ்சாலையில் மதூர் கூட்டுச்சாலை உள்ளது.இங்கிருந்து சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பேருந்து வாயிலாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தினமம்ம சென்றுவருகின்றனர்.
இங்கு பயணியர் நிழற்குடைஇல்லாததால் பள்ளிமாணவர்கள்,வேலைக்கு செல்வோர், வெயில் மற்றும் மழை காலங்களில் சாலையோரம்காத்திருந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும் அப்பகுதியில் ஜல்லிகள் எம்.சாண்ட் ஆகியவை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேகமாக செல்வதால் சாலையில் இருந்து புழுத பறந்து பயணியரின் கண்களைபதம் பார்க்கிறது. இதனால் பயணியர் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில்பயணியர் நிழற்குடை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. எனவே மதூர் கூட்டுச்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.