/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கடல்மங்கலம் ரேஷன் கடை
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கடல்மங்கலம் ரேஷன் கடை
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கடல்மங்கலம் ரேஷன் கடை
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கடல்மங்கலம் ரேஷன் கடை
ADDED : ஆக 25, 2025 11:26 PM

உத்திரமேரூர், கடல்மங்கலத்தில், மூன்று மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு, 330 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர்.
இந்த ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து இருந்ததால், ஒரு ஆண்டுக்கு முன் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. வாடகை கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 8.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டடம் கட்டி மூன்று மாதங்கள் ஆகியும் இன்னமும் பயன்பாட் டிற்கு வராமல், ரேஷன் கடை வாடகை கட்டடத்திலே இயங்கி வருகிறது.
எனவே, புதிய ரேஷன் கடை கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா கூறுகையில், ''கடல்மங்கலம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது,'' என்றார்.