கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்:மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்:மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
UPDATED : ஜூன் 08, 2026 03:34 PM
ADDED : ஜூன் 08, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு வழியாக மஞ்சள்நீர் கிளை கால்வாய் செல்கிறது. இந்நிலையில், கால்வாயில் அடித்து வரப்பட்ட பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை கழிவுகள் மிஸ்ரி அப்பார்ட்மென்டிற்கு செல்லும் சிறுபாலத்தின் அருகில் குவியலாக உள்ளது.
இதனால், கோடை மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.
எனவே, டி.கே.நம்பி தெருவில், மஞ்சள் நீர் கால்வாயில் குவியலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.நீலகண்டன்,
காஞ்சிபுரம்.
