சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
UPDATED : நவ 02, 2026 04:38 PM
ADDED : நவ 02, 2026 04:32 PM

காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை, துாய்மை பணியாளர்கள், கரியங்கேட்டில் இருந்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் கொட்டி வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால், குப்பையில் மழைநீர் தேங்கி அழுகி வருகிறது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் உற்பத்தியாகின்றன.
இதன் காரணமாக, அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, அப்பகுதியில் குப்பை கொட்டுவதை திம்மசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, அப்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இரா. சாந்தகுமார்.
திம்மசமுத்திரம்.
