/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரிகளுக்கான ஓட்டப் பந்தயம் காஞ்சி மாணவிக்கு வெள்ளிப்பதக்கங்கள்

ADDED : நவ 30, 2024 12:26 AM

காஞ்சிபுரம்:சென்னை பல்கலைக்கழகம் உடற்கல்வி துறை சார்பில், சென்னை பல்கலைக்கழத்திற்குட்பட்ட, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அனைத்து கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டி, நவ., 26 - 28 வரை சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், 197 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தமிழ்த்துறை முதலாமாண்டு பயிலும் மாணவி சி.வினிதா, 10,000 மீட்டர் மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்று இரு போட்டியிலும், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் பெற்றார்.
கல்லுாரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவியை கல்லுாரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் பிரகாஷ், உடற்கல்வி இயக்குனர்கள் ஆ.விஜயகுமார், எஸ்.சந்திரசேகர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.