/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி; மழைக்கு சேதமான சாலை
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி; மழைக்கு சேதமான சாலை
ADDED : நவ 27, 2024 10:55 PM

மழைக்கு சேதமான சாலை
காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டை, பாக்ரா பேட்டை, ரெட்டிபேட்டை, மின்நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதியில் வசிப்போர் ரயில்வே சாலை, பேருந்த நிலையம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் திருச்சக்கரபுரம் தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக 30 மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.அரிகிருஷ்ணன்,
காஞ்சிபுரம்.
அரைகுறையாக மூடப்பட்ட கால்வாய்
பெரிய காஞ்சிபுரம், சாத்தான்குட்டை தெரு, சாலை தெருவுடன் இணையும் இடத்தில் சாலையோரம் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாய் உடைந்த பகுதி, அரைகுறையாக மூடப்பட்டுள்ளது. சாலையின் தரைமட்டத்தில் உள்ள கால்வாய் திறந்து கிடப்பதால், சாலையோரம் செல்லும் பாதசாரிகளும், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, அரைகுறையாக மூடப்பட்டுள்ள மழைநீர் கால்வாயை முழுமையாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- எஸ்.ஜானகிராமன்,
காஞ்சிபுரம்.